துணை ராணுவத்திற்கு மூன்று புதிய கலவர தடுப்பு வாகனங்கள் !!

  • Tamil Defense
  • February 4, 2021
  • Comments Off on துணை ராணுவத்திற்கு மூன்று புதிய கலவர தடுப்பு வாகனங்கள் !!

தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞான கவுன்சில் மூன்று கலவர தடுப்பு வாகனங்களை உருவாக்கி உள்ளது.

இலகுரகம், நடுத்தர ரகம் மற்றும் கனரகம் என மூன்று பிரிவுகளிலும் இந்த வாகனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

கனரக வாகனம் 7.5 டன் சுமைதிறனும், நடுத்தர வாகனம் 2.5 டன் சுமைதிறனும் கொண்டவையாக இருக்கும், இலகுரக வாகனம் ட்ராக்டர் அளவில் இருக்கும்.

இவற்றில் பல்குழல் கண்ணீர் புகை குண்டு கருவி, பாதுகாப்பு கேடயம்,
மின்னனு கருவிகள், 360 டிகிரி கண்காணிப்பு அமைப்பு, ஜிபிஎஸ் ஆகியவை உள்ளன.

மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இந்த மூன்று வாகனங்கள் குறித்த சோதனை நடத்தி காட்டப்பட்டு உள்ளது