காஷ்மிரில் பயங்கரம்: சிஆர்பிஎப் பங்கர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

காஷ்மீரின் ஸ்ரீநகரில் மேஜோர் நகரில் உள்ள சிஆர்பிஎப் பங்கர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடையாளம் தெரியப்படாத பயங்கரவாதிகள் இந்த செயலை செய்துள்ளதாகவும் வீசிய பிறகு பங்கர் பற்றி எரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தமையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.மேலும் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.