கஸ்நாவி பலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்த பாக்
1 min read

கஸ்நாவி பலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்த பாக்

புதன் கிழமை அன்று பாகிஸ்தான் தனது கஸ்நாவி தரையில் இருந்து ஏவப்பட்டு தரை இலக்குகளை தாக்கியழிக்கும் ஏவுகணையை பலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.

290கிமீ தூரம் வரை அணுவை சுமந்து சென்று இந்த பலிஸ்டிக் ஏவுகணை தாக்கும் என அந்நாட்டு இராணுவ தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாக் இராணுவத்தின் ஸ்ட்ரேடஜிக் பிரிவின் வருடந்திர போர்பயிற்சியின் இறுதி நிகழ்வாக இந்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டதாக அந்நாட்டு இராணுவத்தின் மீடியா பிரிவு கூறியுள்ளது.

இந்த சோதனை ஸ்ட்ரேடஜிக் கமாண்டின் தளபதி லெப் ஜென் முகமது அலி மற்றும் முக்கிய இராணுவ அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு அறிவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.