லாங்கேவாலா போர்முனையில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய விமானப்படை !!
1 min read

லாங்கேவாலா போர்முனையில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய விமானப்படை !!

1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின் 50ஆவது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் பாலம் விமானப்படை தளத்தில் ஒய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் பரத் குமார் எழுதிய “எபிக் பேட்டல் ஆஃப் லாங்கேவாலா” எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசிய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா,

லாங்கேவாலா சண்டையில பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்திய திட்டம் மிகவும் அற்புதமானது, அந்த தாக்குதல் வெற்றி பெற்று இருந்தால் மேற்கு பகுதி போர் மற்றும் போரின் இறுதி முடிவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்றார்,

மேலும் பேசுகையில் ஆனால் பாகிஸ்தானியர்கள் திட்டமிடும் போது ஜெய்சால்மர் படைதளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஹன்டர் விமானங்களை மறந்து விட்டனர்.

அந்த விமானங்கள் பாகிஸ்தானிய டாங்கி படைகளை துவம்சம் செய்தன, அது பாகிஸ்தானுக்கு மேற்கு முனையில் பலத்த அடியாக அமைந்தது என்றார்.

இது விமானப்படைக்கான வலிமையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது எனவும் அவர் கூறினார்.