
பாகிஸ்தான் வருங்காலத்தில் எல்லையோரம் ஊடுருவல்களை தீவிரபடுத்த விரும்புகிறது.
இதன் ஒரு பகுதியாக சுரங்கங்கள் வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவ வைப்பதோடு மட்டுமின்றி,
ட்ரோன்கள் மூலமாக ஆயுதங்கள், போதை பொருட்கள் மற்றும் வெடி குண்டுகளை கடத்துவது போன்ற செயல்களிலும் பாக் தரப்பு ஈடுபட்டு வருகிறது.
மேலும் எல்லையோரம் பாக் ராணுவ வீரர்கள், சிறப்பு படையினர் மற்றும் ஐ.எஸ்.ஐ அமைப்பினரின் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது.
இதன் மூலம் ஜம்மூ காஷ்மீர் பிராந்தியத்தில் பயங்கரவாத செயல்கள் மூலமாக வன்முறையை கட்டவிழ்த்து விட பாகிஸ்தான் முயற்சி செய்வது உறுதி ஆகிறது.