
உலகில் உள்ள 45 நாடுகளின் கடற்படையுடன் இணைந்து கடற்போர் பயிற்சியை நடத்த உள்ளது பாகிஸ்தான்.அமன்-21 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சியில் இரஷ்ய,சீன கடற்படைகளும் கலந்து கொள்ள உள்ளன.
அராபியன் கடலில் இந்த வாரம் நடைபெற்ற உள்ளது.இதில் நேட்டோ நாடுகளின் கடற்படையும் கலந்து கொள்ள உள்ளன.2010க்கு பிறகு நேட்டோ மற்றும் இரஷ்ய கடற்படைகள் இணைந்து கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும்.அதே போல பிடன் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அமெரிக்க,சீன கடற்படைகள் இணைந்து பங்கு பெறும் முதல் பயிற்சியாக இது உள்ளது.
சீனாவின் டைப் 052D டெஸ்ட்ராயர், டைப் 054A பிரிகேட் Type 903A சப்ளிமென்ட் கப்பல் ஆகியவை கலந்து கொள்கின்றன.அதே போல இரஷ்யாவின் புரோஜெக்ட் 22160 ரோந்து கப்பல், அட்மிரல் கிரிகோரோவிச் பிரிகேட் கப்பலும் கலந்து கொள்ள உள்ளன.