சீன கடனால் திணறும் பாகிஸ்தான், உற்ற நண்பணிடம் கெஞ்சும் பரிதாபம் !!

  • Tamil Defense
  • February 25, 2021
  • Comments Off on சீன கடனால் திணறும் பாகிஸ்தான், உற்ற நண்பணிடம் கெஞ்சும் பரிதாபம் !!

பாகிஸ்தான் சீனா ஆகியவை ஒருவரை ஒருவர் உற்ற நண்பர்கள் என கூறி வருகின்றன, இந்த நிலையில் பாக் சீனாவிடம் கெஞ்சும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.

சீனா பாகிஸ்தானில் கூட்டாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதற்கு மிகப்பெரிய அளவில் கடன் வழங்கி உள்ளது.

பல பயன்களை பாக் இதனால் பெற்றாலும் சக்திக்கு மீறிய இந்த கடன்களால் பாகிஸ்தான் சிக்கி திணறி வருகிறது என்பது மிகப்பெரிய உண்மை.

இதனால் தற்போது பாக் அதிகாரிகள் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தும் வேகத்தை குறைத்து கொள்ள சீனாவுடன் பேசி வருகின்றனர்.

சீனாவுக்கு சுற்றுபயணம் சென்ற பாக் அதிபர் ஆரிஃப் ஆல்வி சீன அதிபரிடம் 4.5% வட்டியை 2.5% அளவுக்கு குறைக்கும் படியும்,

கடன்களை அடைக்கும் காலத்தை சுமார் 10 வருடங்கள் நீட்டிப்பு செய்து தருமாறும் கோரிக்கை வைத்துள்ளார், இவை ஏற்கப்பட்டால் வருடத்திற்கு 600மில்லியன் டாலர்கள் கடன்சுமை பாகிஸ்தானிற்கு குறையும்.

தற்போது ஒரு வருடத்திற்கு பாகிஸ்தான் அரசு சுமார் 4 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையை கடன்களுக்காக செலவிட வேண்டிய நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.