காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு பேச்சுவார்த்தை, இலங்கையில் இம்ரான் பேச்சு !!

  • Tamil Defense
  • February 26, 2021
  • Comments Off on காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு பேச்சுவார்த்தை, இலங்கையில் இம்ரான் பேச்சு !!

இலங்கைக்கு இரண்டு நாள் சுற்றுபயணம் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அஙகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது இந்தியா பாகிஸ்தான் இடையில் காஷ்மீர் மட்டுமே பிரச்சினையாக உள்ளது, அதற்கு பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு எனவும்,

துணை கண்டத்தில் வறுமையை ஒழிக்க ஒரே வழி வர்த்தக முன்னேற்றம் அதற்கு இருதரப்பு நல்லுறவு அவசியம் எனவும் கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை “இந்தியாவின் நிலைப்பாடு உலகறிந்தது, இதற்கு தீர்வு பாகிஸ்தான் தரப்பு தான்,

பயங்கரவாத ஒழிப்பு மட்டுமே நல்லுறவுக்கு வழி வகுக்கும் என தெரிவித்துள்ளது.