தெற்காசியாவில் போர் மூண்டால் ..! பாக் அமைச்சர் கருத்து

  • Tamil Defense
  • February 19, 2021
  • Comments Off on தெற்காசியாவில் போர் மூண்டால் ..! பாக் அமைச்சர் கருத்து

தெற்காசியாவில் போர் மூண்டால் பிராந்திய சமநிலை பாதிக்கப்படும் : பாக் வெளியுறவு அமைச்சர் !!

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமுத் குரேஷி கராச்சியில் நடைபெற்று வரும் சர்வதேச கடல்சார் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பாகிஸ்தான் சர்வதேச கடல்சார் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து உள்ளதாகவும், குறிப்பாக இந்திய பெருங்கடலின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் பேசுகையில் இதன் காரணமாக பாகிஸ்தான் இந்திய பெருங்கடல் பகுதியின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும்,

கடற்கொள்ளை, ஆயுத கடத்தல், போதை பொருள் கடத்தல் மற்றும் ஆட் கடத்தல் போன்ற செயல்பாடுகளை முடக்க தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும்,

ஆனால் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள ஒரு நாடு (இந்தியா) தனது ராணுவ வலிமையை பெருக்கி வருவது நல்லதல்ல எனவும்,

தெற்காசியாவில் ஒரு போர் ஏற்ப்பட்டால் இந்த பிராந்தியத்தின் சமநிலையை பாதிப்பதோடு மட்டுமின்றி கடல்வழி வர்த்தகம் தடைபட்டு உலகளாவிய பாதிப்பு ஏற்படும் என்பதை சர்வதேச சமுகம் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.