சீன ஜே.எஃப்17 விமானங்களை ஓரம்கட்ட வேண்டிய நிலையில் பாக் விமானப்படை !!
1 min read

சீன ஜே.எஃப்17 விமானங்களை ஓரம்கட்ட வேண்டிய நிலையில் பாக் விமானப்படை !!

இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானங்களை விட சீன ஜே.எஃப்17 விமானங்கள் மிக சிறந்தவை என பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை தம்பட்டம் அடித்து வந்த நிலையில்,

பாகிஸ்தான் விமானப்படையில் உள்ள ஜே.எஃப் 17 விமானங்கள் பயங்கர கோளாறுகளை சந்திப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது இந்த விமானங்களில் மின்னனு அமைப்புகளில் கோளாறுகளும், விமானத்தின் உடலில் விரிசல்கள் மற்றும் சிதைவுகள் ஏற்பட்டு உள்ளன.

ஏற்கனவே ஒரு தொகுதி விமானங்கள் பறக்க முடியாத நிலையை எட்டிய சமயத்தில் மற்றொரு தொகுதி விமானங்களும் அந்த நிலையை அடைந்துள்ளன.

பல்வேறு காரணங்களால் பாக் விமானப்படையில் உள்ள 40% ஜே.எஃப்17 விமானங்கள் பறக்க முடியாத நிலையில் உள்ளன.