தார் பகுதியில் ஒரு மாத போர்பயிற்சில் பாக்..!எதற்கு தயாராகிறது பாக்..?

  • Tamil Defense
  • February 16, 2021
  • Comments Off on தார் பகுதியில் ஒரு மாத போர்பயிற்சில் பாக்..!எதற்கு தயாராகிறது பாக்..?

தார் பாலைவனத்தின் ஒரு பகுதி பாகிஸ்தானில் உள்ளது, தற்போது இங்கு பாகிஸ்தான் தரைப்படை போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த போர் பயிற்சியில் கராச்சி கோர்ப்ஸ் படைப்பிரிவு பங்கு பெற்றுள்ளது. சிந்து மாகாணத்தில் உள்ள சோர் நகரில் இருந்து 74கிமீ தொலைவில் இந்த பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு மாத காலம் நடைபெறும் இந்த பயிற்சியில் பாலைவன போர் முறை பயிற்சிகள் மேற்கொள்ளப்படும், தாக்குதல் தடுப்பு முறைகளும் இதில் அடக்கம்.

மேற்குறிப்பிட்ட சோர் நகரில் பாகிஸ்தான் தரைப்படையின் பாலைவன போர் கல்லூரி அமைந்துள்ளது.

கடந்த 1987ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இங்கு பாலைவன போர முறைகளில் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.