கல்வான் வீரர்களுக்காக சோலார் டென்ட் கட்டிய சோனம் அவர்கள்

  • Tamil Defense
  • February 22, 2021
  • Comments Off on கல்வான் வீரர்களுக்காக சோலார் டென்ட் கட்டிய சோனம் அவர்கள்

லடாக்கை சேர்ந்த என்ஜினியர் தான் சோனம் வாங்க்சுக் என்பவர் ஆவார்.இவர் தற்போது இந்திய இராணுவத்திற்காக சூரிய ஔியில் இயங்க கூடிய டென்ட் ஒன்றை வடிவமைத்து கட்டியுள்ளார்.கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள வீரர்களுக்காக இந்த டென்டை ஏற்படுத்தியுள்ளார்.

-14 டிகிரி குளிரை கூட இந்த டென்ட் தாங்க வல்லது என அவர் கூறியுள்ளார்.30கிகி எடை குறைவாக உள்ள இந்த ஒரு டென்டில் பத்து வீரர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

தற்போது பங்கோங் ஏரிப் பகுதியில் இருந்து இருநாடுகளும் தங்களது படைகளை விலக்கி வருகிறது.சீனா தனது படைகளை பின்வாங்கியுள்ளது.இது குறித்த புகைப்படங்களை முன்பே நமது பக்கத்தில் பகிர்ந்திருந்தோம்.

மேலும் மற்ற பகுதிகளான கோக்ரா,தெஸ்பங் மற்றும் ஹாட்ஸ்பிரிங் பகுதியில் இருந்து படைகளை விலக்கும் பொருட்டு 10வது கட்ட பேச்சுவார்த்தைகள் இருநாட்டுக்கும் இடையே நடந்து முடிந்துள்ளது.

படிப்படியாக அமைதியான முறையில் இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் விதம் படைகளை பின்வாங்கி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.