தொடர்ந்து 3 மாதம் வரை பறக்கும் இந்தியாவின் புதிய இன்ஃபினிட்டி ட்ரோன் !!
1 min read

தொடர்ந்து 3 மாதம் வரை பறக்கும் இந்தியாவின் புதிய இன்ஃபினிட்டி ட்ரோன் !!

அதிக உயரத்தில் பறக்கக்கூடிய ட்ரோன் ஒன்றை இந்தியா உருவாக்கி வருகிறது, அடுத்த 5 ஆண்டுகளில் ராணுவத்தில் இது சேர்க்கப்பட உள்ளது.

சூரிய மின்சக்தியில் இயங்கும் இந்த ட்ரோன் சுமார் 90 நாட்கள் வரை 65,000அடி உயரத்தில் பறக்கும் திறன் படைத்தது.

CATS அமைப்பின் ஒரு பகுதியான இந்த ட்ரோன் பூமியின் “அடுக்கு மண்டலம்” (STRATOSPHERE) வரை சென்று பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த அடுக்கு மண்டலம் தான் அடுத்து ட்ரோன்கள் பயன்படுத்தும் பகுதியாக இருக்கும் அதற்கான இந்தியாவின் தீர்வு தான் இந்த ட்ரோன்.

பல்வேறு சென்சார்கள், சிந்தடிக் அப்பெர்சர் ரேடார் ஆகியவற்றை கொண்டு கண்காடணித்து தகவல்கள் அளிக்கும் திறன் கொண்டது.

மேலும் போர்க்களத்தில் நடப்பவற்றை நேரடி காணொளியாக கட்டுபாட்டு மையத்திற்கு வழங்கும்.

இதனை ராணுவத்திற்கு மட்டுமின்றி பேரிடர் மேலாண்மை, இணைய சேவை, கடல்வழி போக்குவரத்து மேலாண்மை, இயற்கை வளங்கள் மேலாண்மை மற்றும் ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்களிலும் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.