இந்தியாவின் புதிய CCM ஏவுகணை ஏரோ இந்தியாவில் அறிமுகம் !!

  • Tamil Defense
  • February 3, 2021
  • Comments Off on இந்தியாவின் புதிய CCM ஏவுகணை ஏரோ இந்தியாவில் அறிமுகம் !!

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் புதிய CCM ஏவுகணையை தயாரித்து உள்ளது.

அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட இந்த ஏவுகணை ரஷ்ய R73 ஏவுகணைக்கு மாற்றாக அமையும்.

மேலும் இதற்கு முன்னர் இந்திய விமானப்படை விமானங்கள் அந்தந்த நாட்டு ஆயுதங்களை பயன்படுத்தி வந்தன, இதுவே பெரும் சவாலாக விளங்கியது.

இனி எந்த விமானத்திலும் குறிப்பிட்ட சில வகை ஏவுகணைகளை பயன்படுத்தி கொள்ளும் நிலையை இந்த ஏவுகணை உருவாக்கி உள்ளது அதாவது பொதுவான சில ஆயுதங்களை அனைத்து விமானங்களிலும் பயன்படுத்தி கொள்ளலாம்.