புதிய வான் மற்றும் கடல்சார் கட்டளையகங்கள் பயனளிக்குமா ?

  • Tamil Defense
  • February 18, 2021
  • Comments Off on புதிய வான் மற்றும் கடல்சார் கட்டளையகங்கள் பயனளிக்குமா ?

விரைவில் வரும் வான்பாதுகாப்பு மற்றும் கடல்சார் கட்டளையகங்கள் !!

இந்திய ராணுவம் தற்போது நவீன காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொள்ளும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

இதன் ஒரு.பகுதியாக கூட்டுபடை தலைமை தளபதி பொறுப்பு உருவாக்கப்பட்டு , பின்னர் ஒருங்கிணைந்த முப்படைகள் சிறப்பு படை கட்டளையகம் உருவாக்கப்பட்டது.

அந்த வரிசையில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு கட்டளையகம் மற்றும் ஒருங்கிணைந்த கடல்சார் கட்டளையகங்கள் உருவாக்கப்பட உள்ளன.

தற்போது இந்த கட்டளையகங்ளை தோற்றுவிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகளும் சில பயிற்சிகளும் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு கட்டளையகம் உத்தரபிரதேச மாநிலம் பரக்யராஜ் (அலகாபாத்) நகரை தலைமை இடமாக கொண்டு இயங்கும், வருகிற ஏப்ரல் மாதம் இந்த கட்டளையகம் தோற்றுவிக்கப்படும்.

இதன் தளபதியாக மூன்று நட்சத்திர அந்தஸ்து கொண்ட விமானப்படை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். இந்த கட்டளையகத்தின் கீழ் முப்படைகளின் அனைத்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை போல ஒருங்கிணைந்த கடல்சார் கட்டளையகம் கர்நாடக மாநிலம் கார்வாரை தளமாக கொண்டு இயங்கும்,
வருகிற மே மாதம் இந்த கட்டளையகம்தோற்றறுவிக்கப்பட உள்ளது.

இதன் தளபதியாக மூன்று நட்சத்திர அந்தஸ்து கொண்ட கடற்படை அதிகாரி ஒருவர் நியமிக்கபடுவார். இதன் கீழ் இந்தியாவுக்கு கடல்வழியாக வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் முப்படை தளவாடங்களும் இடம்பெறும்.

இது தவிர இந்தியாவின் மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு எல்லலகளை பாதுகாக்க மூன்று புதிய ஒருங்கிணைந்த கட்டளையகங்கள் தோற்றுவிக்கப்பட உள்ளன,

தற்போது இறுதிகட்ட பணிகளில் உள்ள இந்த கட்டளையகங்கள் அடுத்த வருடம் இறுதியில் தோற்றுவிக்கப்படும்.

மேலும் ஒர் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து மற்றும் கையாளுதல் கட்டளையகமும் உருவாக்கப்பட உள்ளதாகவும், இது பல்வேறு சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் கூறப்படுகிறது.