உத்ரகண்டில் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு

  • Tamil Defense
  • February 7, 2021
  • Comments Off on உத்ரகண்டில் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு

உத்ரகண்டில் தற்போது வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்தோ திபத் எல்லைப் படையினர் ஏற்கனவே மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து இரு C-130 விமானங்கள் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுடன் டேராடூன் விரைந்துள்ளது.அங்கு ஜோஷிமத்தில் மி-17 மற்றும் த்ருவ் வானூர்திகள் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட இடங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மேலதிக துருவ் வானூர்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.