உத்ரகண்ட் கிளாசியர் வெடிப்பு குறித்த அப்டேட்

  • Tamil Defense
  • February 7, 2021
  • Comments Off on உத்ரகண்ட் கிளாசியர் வெடிப்பு குறித்த அப்டேட்

உத்ரகண்ட் அரசிற்கு உதவ முப்படைகளும் தற்போது களத்தில் இறங்கியுள்ளன.

இந்திய இராணுவம்

1.மல்லாரி ஆக்சிஸ் அருகே நான்கு குழு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.இரு குழு வீரர்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளனர்

2.ஜேசிபிகளுடன் என்ஜினியர் டாஸ்க் படை களமிறக்கப்பட்டுள்ளது.

  1. இரு ஆம்புலன்சுகளுடன் மெடிக்கல் பிரிவு களமிறக்கப்பட்டுள்ளது.

4.மீட்பு பணிகளுக்காக இரு சீட்டா வானூர்திகள் களமிறக்கப்பட்டுள்ளன.

  1. ஜோசிமத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

விமானப்படை

  1. ஐந்து டன்கள் பொருள்களுடன் 60 NDRF வீரர்கள் சி-130 விமானம் உதவியுடன் ஜோலிகிரான்ட் விமான தளம் விரைந்துள்ளனர்.

7.NDRF வீரர்களுக்காக மேலதிக ஒரு C130 மற்றும் ஒரு AN 32 ஹின்டன் தளத்தில் தயாராக உள்ளது.

8.ஜாலிகிரான்டில் இருந்து ஜோசிமத்திற்கு NDRF வீரர்களை கொண்டு செல்ல 3 IAF Mi-17 வானூர்திகள் தயாராக உள்ளது.

கடற்படை

9.மரைன் கமாண்டோ வீரர்கள் மற்றும் 16 வீரர்கள் டெல்லியிலும் 40 பேர் மும்பையிலும் களமிறக்கப்பட தயாராக உள்ளனர்.

தற்போது கள மருத்துவமனை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்த லைட்டிங் அரேஞ்மென்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.