100 புதிய ராணுவ பள்ளிகள் திறக்க திட்டம் !!

  • Tamil Defense
  • February 3, 2021
  • Comments Off on 100 புதிய ராணுவ பள்ளிகள் திறக்க திட்டம் !!

கடந்த 1960ஆம் ஆண்டு அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனன் அவர்களுடைய முயற்சியால் ராணுவ பள்ளிகள் திறக்கப்பட்டன.

தற்போது நாடு முழுவதும் 33 ராணுவ பள்ளிகள் சைனிக் ஸ்கூல் சொசைட்டியின் கீழ் இயங்கி வருகின்றன.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் போது சுமார் 100 புதிய ராணுவ பள்ளிகளை தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திறக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதன்மூலம் நாட்டில் இன்னும் ஏராளமான ராணுவ அதிகாரிகளை உருவாக்க முடியும் என்பது வரவேற்க தகுந்த விஷயம்.