பினாகா ராக்கெட் ஏற்றுமதிக்கு அனுமதி

48 கிமீ வரை செல்லக்கூடிய பினாகா மார்க் 1 பலகுழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்பை ஏற்றுமதி செய்ய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய நிறுவனமான லார்சன் அன்ட் டூப்ரோ ( L&T) இந்த பினாகா அமைப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்.

இதற்கு முன் L&T நிறுவனம் கப்பல்கள் மற்றும் ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதியும் செய்துள்ளது.

L&T, கோத்ரெஜ் அன்ட் பாய்சி, சோலார் இன்டஸ்ட்ரிஸ் மற்றும் டாடா ஆகியவை பினாகா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.