மியான்மரில் ராணுவ ஆட்சி ; முக்கிய தலைவர்கள் கைது !!

  • Tamil Defense
  • February 1, 2021
  • Comments Off on மியான்மரில் ராணுவ ஆட்சி ; முக்கிய தலைவர்கள் கைது !!

கடந்த சில மாதங்களாக மியான்மர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக அந்நாட்டு ராணுவம் குற்றச்சாட்டு முன்வைத்தது.

இந்த நிலையில் நேற்று அந்நாட்டு ராணுவம் இரவோடு இரவாக ஆட்சி கவிழ்ப்பு செய்துள்ளது.

ஆங் சாங் சு கி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர், இந்த ராணுவ ஆட்சி ஒரு வருடம் அமலில் இருக்கும் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

இது பற்றி இந்தியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

ஐ.நா பொது செயலாளர் திரு. அண்டனியோ குவட்டரஸூம் கவலை தெரிவித்துள்ளார்.