
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் சிலி கடற்படைக்காக ஒரு கப்பலை கட்டும் ஒப்பந்தத்தை நமது லார்சன் அன்ட் டுப்ரோ நிறுவனத்திற்கு வழங்கியது.
கடந்த வருடம் இதன் பணிகள் தொடங்கி இந்த வருடம் நிறைவுபெற்ற நிலையில் தற்போது சிலி நாட்டை இக்கப்பல் சென்றடைந்துள்ளது.
ஏ.டி.எஃப்-65 என அழைக்கப்படும் இந்த கப்பல் 70மீட்டர் நீளமும், 2500டன்கள் எடையும் கொண்டது 38 சிப்பந்திகள் மற்றும் 22 பயணிகள் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீட்பு பணிகள், தீயணைப்பு, எரிபொருள் நிரப்புதல், எண்ணெய் கசிவுகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை இது மேற்கொள்ளும்.