
இந்திய விமானப்படைக்கு சுமார் 272 சுகோய் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அதில் 50 ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டன,
மீதம் உள்ள 222 போர் விமானங்களும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கடைசி இரண்டு சுகோய் போர் விமானங்களின் தயாரிப்பு பணிகளும் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவை இரண்டுமே பிரம்மாஸ் ஏவுகணையை சுமந்து செல்லும் திறன் படைத்தவை என்பதும் இந்திய விமானப்படை இத்தகைய 40 விமானங்களை பயன்படுத்த உள்ளதும், அதில் 18 விமானங்கள் தஞ்சையில் நிறுத்தப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது,
மேலும் விபத்துக்குள்ளான விமானங்களின் எண்ணிக்கையை ஈடுசெய்ய 12சுகோய் விமானங்களை ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.