
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள மக்கிதார் வனப்பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்க,
பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்அப்போது பரவலாக ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கிடைத்தன.
ஏகே47, எஸ்.எல்.ஆர், 303 உள்ளிட்ட துப்பாக்கிகள், யூ.பி.ஜி.எல், ஒரு பெட்டி தோட்டாக்கள் ஆகியவை கைபற்றப்பட்டன.
இதுகுறித்து பேசிய அதிகாரிகள் பாதுகாப்பு படையினரின் ஒருங்கிணைந்த விரைவான செயல்பாடு இந்த நடவடிக்கை வெற்றி பெற காரணமாக அமைந்தது என்றனர்.
காஷ்மீரில் பயங்கரவாதம் கடுமையாக ஒடுக்கப்பட்டு வரும் நேரத்தில் அமைதியை சீர்குலைக்க பயங்கரவாதிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.