அமைதி விரும்பி நாடான ஜப்பான் முதல் தாக்குதல் கொள்கையை அமல்படுத்தியது காரணம் என்ன ??

கடந்த 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் அணு ஆயுத தாக்குதலில் பேரழிவை சந்தித்து தோல்வியடைந்த நாடு ஜப்பான்.

தற்போது 75 ஆண்டுகள் கழித்து சமாதான விரும்பி நிலைபாட்டில் இருந்து விலகி முதல் தாக்குதல் கொள்கையை அமல்படுத்தி உள்ளது.

இதன்மூலம் இனி ஜப்பான் கடலோர காவல்படை தன் எல்லைக்குள் ஊடுருவும் பிறநாட்டு கப்பல்கள் மீது ஏவுகணைகளை ஏவ முடியும்.

அமைதி ஜப்பானிய அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு பகுதி ஆகும் ஆனால் அதனை அகற்றாமல் சிறிய மாற்றம் செய்துள்ளது.

இனி சீனா உரிமை கோரும் சென்காகு தீவுகளில் பிரச்சனை ஏற்பட்டால் ஜப்பான் முதல் தாக்குதலை தொடுக்க முடியும்.

ஜப்பான் சட்டப்படி அங்கு ராணுவம் இல்லை ஆனால் அது தற்பாதுகாப்பு படையாகும் இது பேச்சளவில் தான் இன்று உலகின் சக்திவாய்ந்த அதிநவீன ராணுவங்களில் ஜப்பான் ராணுவமும் ஒன்று.

சுமார கடந்த ஒன்பது வருடங்களாக ஜப்பானிய பாதுகாப்பு படை பட்ஜெட் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது, இந்த வருடம் சுமார் 51 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

சீனா இதற்கு முன்னர் முதல் தாக்குதல் சட்டத்தை இயற்றியதற்கு ஜப்பானுடைய பதிலடியாக பார்க்கப்படுகிறது.