அஜித் தோவலை குறிவைக்கும் பாகிஸ்தான் !! அதிர்ச்சி தகவல்கள்

  • Tamil Defense
  • February 15, 2021
  • Comments Off on அஜித் தோவலை குறிவைக்கும் பாகிஸ்தான் !! அதிர்ச்சி தகவல்கள்

நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் இலக்கு வைத்துள்ளது.

கடந்த 7ஆம் தேதி காஷ்மீரின் ஷோபியானில் ஹிதயத் உல்லா மாலிக் கைது செய்யப்பட்டான்.

அவனிடம் இருந்து தலைநகர் தில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அலுவலகம்,

மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் பற்றிய காணொளி ஆகியவை கைபற்றப்பட்டன.

இவன் ஜெய்ஷ் அமைப்பின் ஒரு பிரிவான லஷ்கர் இ முஸ்தஃபாவை சேர்ந்தவன், தில்லிக்கு விமானத்தில் வந்துவிட்டு திரும்பி பேருந்தில் சென்றுள்ளான.

இவன் மீது ஏற்கனவே வங்கி கொள்ளை, தற்கொலைப்படை தாக்குதல் நடத்த உதவியது, ஆயுதங்களை வைத்திருந்தது போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.