ஃபிங்கர் 3 அருகே தான்சிங் தபா நிலையை காவல் செய்ய உள்ள ஐடிபிபி வீரர்கள்
எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இருந்து இந்திய இராணுவம் படைகளை திரும்ப பெற உள்ள நிலையில் ஃபிங்கர் 3 அருகே உள்ள தான்சிங் தாபா நிலையை ஐடிபிபி வீரர்கள் கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளனர்.
இராணுவம் வெளியேறிய பிறகு ஐடிபிபி படை இந்த பகுதிகளை ஆக்கிரமித்து பின் தனது ரோந்து பணிகளை தொடங்கும்.இந்திய திபத் எல்லையை காக்கும் பொறுப்பு ஐடிபிபி படையினுடையது தான்.சுமார் 3488 கிமீ நீளமுள்ள இந்த எல்லையை ஐடிபிபி வீரர்கள் தான் காவல் காக்கின்றனர்.
எல்லை நிலைமையை முழுதாக கவனித்து வருவதாகவும் விரைவில் வீரர்களை மறுதிருப்பம் செய்ய உள்ளதாகவும் அப்படை கூறியுள்ளது.இந்த மாத முற்பகுதியில் தொடங்கிய இராணுவத்தை திரும்ப பெறும் முடிவு பங்கோங் பகுதியில் முடிந்துள்ளது.
இது தவிர தெஸ்பங்,கோக்ரா மற்றும் ஹாட்ஸ்பிரிங் பகுதியில் இருந்து சீனப்படைகளை வெளியேற்ற பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.