உத்தராகண்ட் பெருவெள்ளம்; சுரங்கத்தில் 16 பேரை உயிருடன் மீட்ட ஐடிபிபி படையினர் !!

  • Tamil Defense
  • February 8, 2021
  • Comments Off on உத்தராகண்ட் பெருவெள்ளம்; சுரங்கத்தில் 16 பேரை உயிருடன் மீட்ட ஐடிபிபி படையினர் !!

நேற்று உத்தராகண்ட் மாநிலத்தில் நந்தா தேவி பனிமலை முகட்டின் ஒரு பகுதி உடைந்ததை அடுத்து பெருவெள்ளம் ஏற்பட்டது.

இதன் காரணமாக சமொலி மாவட்டத்தில் பெரும் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வில் 150க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்,மேலும் அதே எண்ணிக்கையிலான மக்களையும் காணவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் டபொவான் பகுதியில் சுரங்கம் ஒன்றில் 16 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து இந்தோ திபெத் எல்லை காவல்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒரு உயிர்சேதமும் இல்லாமல் 16 பேரையும் தகுந்த நேரத்தில் வீரர்கள் மீட்டது வைரலாகி வருகிறது.