
கல்வான் தாக்குதலின் போது சீன வீரர்களுக்கு எதிராக இந்தோ திபத் எல்லைப் படை வீரர்கள் இரவு முழுதும் சண்டையிட்டுள்ளனர்.சீல்டு கொண்டு தங்களை காத்தவாறே சீனர்களை எதிர்த்து நின்றுள்ளனர்.
இரவு முழுதும் முன்னேறி வந்த சீன வீரர்களை வெற்றிகரமாக தடுத்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு தகுந்த பதிலடியும் வழங்கப்பட்டதாக ஐடிபிபி தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் ஆகச் சிறப்பாக செயல்பட்டதாக மொத்தமாக 294 ஐடிபிபி வீரர்களுக்கு Director General (DG) commendation விருது வழங்கப்பட்டது.
மலைப் பகுதிகளில் செயல்பட நமது வீரர்கள் பெற்றிருந்த சிறந்த பயிற்சியாலும் தங்களது அனுபவத்தாலும் சீன வீரர்களை முன்னேறாமல் தடுத்துள்ளனர்.
அனைத்து பிரச்சனைக்குரிய பகுதிகளிலும் ஐடிபிபி வீரர்கள் துரிதமாக செயல்பட்டு நிலைமையை தங்களுக்கு சாதகமாக கொண்டு வந்துள்ளனர்.ஒரு கமாண்டன்ட் தலைமையில் ஆகச் சிறப்பாக செயல்பட்ட 21 வீரர்களுக்கு வீரதீர விருதுகள் வழங்க பரிந்துரை செய்துள்ளதாக ஐடிபிபி கூறியுள்ளது.
இந்திய இராணுவத்தோடு தோலுக்கு தோலாக நின்று போர் புரிந்தது மட்டுமல்லாமல் காயமுற்ற இந்திய வீரர்களையும் காப்பாற்றி கூட்டி வந்துள்ளனர்.