
பிரேசிலுக்கு இஸ்ரோ உதவி செய்ய உள்ளது.அதாவது இந்த மாத இறுதியில் பிரேசிலின் அமேசோனியா-1 செயற்கைகோளை ஏவ உள்ளது இஸ்ரோ.
இஸ்ரோ சில நாட்களுக்கு முன் தனது கமெர்சியல் கிளையை திறந்தது. NewSpace India Limited (NSIL) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிளை கமெர்சியல் நோக்கில் செயற்கைகோளை ஏவும்.இந்த கிளை தற்போது தனது முதல் செயற்கைகோளை PSLV-C51/ Amazonia-1 இந்த மாத இறுதியில் ஏவும்.
அமேசானியா-1 என்பது ஒரு ஆப்டிகல் புவிக் கண்காணிப்பு செயற்கைகோள் ஆகும்.இதை பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.ஒரு பிரேசில் செயற்கைகோளை இந்தியா ஏவுவது இதுவே முதல் முறை ஆகும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் வைத்து இந்த செயற்கைகோளை ஏவுவதற்காக வேலைப்பாடுகள் நடந்தேறி வருகின்றன.
இத்துடன் வேறு 15 செயற்கைகோள்களும் கமெர்சியல் அடிப்படையில் ஏவப்பட உள்ளது.