இஸ்ரேல், சவுதி, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக ராணுவ கூட்டணி உருவாகிறதா ?? மிகப்பெரிய புவிசார் அரசியல் திருப்பம் !!

  • Tamil Defense
  • February 26, 2021
  • Comments Off on இஸ்ரேல், சவுதி, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக ராணுவ கூட்டணி உருவாகிறதா ?? மிகப்பெரிய புவிசார் அரசியல் திருப்பம் !!

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த காலத்தில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாக வழிவகை செய்தார்.

ஆனால் தற்போது இருக்கும் பைடன் நிர்வாகம் ஈரானுடன் காட்டும் நெருக்கும் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக இஸ்ரேல் மற்ற மூன்று நாடுகளுடனும் புதிய ராணுவ கூட்டணியை உருவாக்க பேசி வருகிறது.

இது சாத்தியமாகும் பட்சத்தில் உலக அரசியலில் பெரும் திருப்பு முனையாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இந்த கூட்டணி ஈரானுக்கு பெரும் சவாலை அளிக்கும் நோக்கத்தில் செயல்படும் என எதிர்பார்க்கலாம்.