அர்ஜூன் டாங்கிகளின் முடிவு எழுதப்படுகிறதா ??

  • Tamil Defense
  • February 15, 2021
  • Comments Off on அர்ஜூன் டாங்கிகளின் முடிவு எழுதப்படுகிறதா ??

அர்ஜூன் போர் டாங்கிகள் இந்தியாவின் மிகப்பெரிய சுதேசி ராணுவ திட்டங்களுள் ஒன்றாகும்.

சமீபத்தில் அர்ஜூன் மார்க் 1ஏ டாங்கி நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டு சுமார் 118 டாங்கிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது பாராட்டத்தக்க விஷயம் என்றாலும் சுதேசி தொழில்நுட்பத்திற்கு தேவையான ஊக்கம் போதவில்லை.

இத்தகைய சிறிய ஆர்டர்கள் இந்த குறிப்பிட்ட திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்கு உயிர்ப்புடன் வைக்கவே உதவும்.

மிகப்பெரிய ஆர்டர்களே சுதேசி தொழில்நுட்பத்திற்கு தேவையான ஊக்கத்தை அளிக்கும்.

மேலும் இந்த ஒப்பந்தத்துடன் அர்ஜூன் டாங்கிகளுக்கு முடிவுரை எழுதப்படும் என தெரிகிறது.

4ஆவது மற்றும் 5ஆம் தலைமுறை போர் டாங்கி தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தப்படும் நிலை உள்ளது மேலும் அர்மாட்டா டாங்கிகளை வாங்க ரஷ்யா அழுத்தம் கொடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.