
சீனா தனது ஐந்தாம் தலைமுறை விமானத்தை நவீனப்படுத்தும் பொருட்டு தற்போது ஜே-20 விமானத்தில் இருக்கும் இரஷ்ய AL-31F என்ஜினை மேம்படுத்தி உள்நாட்டிலேயே WS-10C என்ற என்ஜினை மேம்படுத்தி அதை ஜே-20 விமானத்துடன் இணைத்துள்ளது.
இந்தியா தனது விமானப்படையில் ரபேல் விமானங்களை இணைத்து தனது தாக்கும் சக்தியை அதிகப்படுத்திய பிறகு இந்த செயலை சீனா செய்துள்ளது.
லடாக்கில் இருந்து சீனா தனது படைகளை பின்வாங்க முடிவு செய்திருந்தாலும் தனது விமானப்படையை அப்படியே நிறுத்தியுள்ளது.இந்தியாவும் தனது விமானப்படையை தயாராகவே வைத்துள்ளது.
J-20 விமானத்தில் தற்போது கண்ணுக்கு எட்டுகிற இலக்கை தாக்கும் PL-10 ஏவுகணைகளும் மற்றும் கண்ணுக்கு எட்டுவதற்கும் அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் PL-15 ஏவுகணைகளும் உள்ளன.இரு விமானிகள் வகை ஜே-20 விமானமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஜே-20 விமானம் தற்போது புதிய Thrust-Vector Controls (TVC) கொண்டுள்ளதால் விமானிகளால் அதிக கோணத்தில் வளைந்து நெளிந்து பறக்க முடியும்.
கடந்த வருடம் தான் சீனா ஜே-20 தொடர் தயாரிப்பை தொடங்கியது.சீனா ஜே-20 விமானங்களை இந்திய எல்லைக்கு அருகே நிலைநிறுத்தியுள்ளது.அதே போலவே இந்தியாவும் ரபேல் விமானங்களை நிறுத்தியுள்ளது.
சீன விமானப்படையில் தற்போது ஜே-20 தான் அதிநவீன விமானமாக உள்ளது.சீனாவிடம் 20 விமானங்கள் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.சீனா இதுவரை ஜே-20 கொண்டு எந்த தாக்குதலும் நடத்தியது இல்லை.
மறுபுறம் இந்தியாவிடம் ரபேல் உள்ளன.இந்தியா 23 வருடங்களுக்கு பிறகு வாங்கிய புதிய ரக விமானம் ரபேல் ஆகும்.நிறைய சக்தி வாய்ந்த ஏவுகணைகளை ரபேல் விமானங்களால் சுமக்க முடியும்.அவற்றுள் MBDAவின் Meteor வான்-வான் ஏவுகணை மற்றும Scalp க்ரூஸ் ஏவுகணை மிக முக்கியமானவை.இரண்டுமே அதிநவீனமானவை.
மேலும் ரபேலும் சரி அது தாங்கியிருக்கும் ஆயுதங்களும் சரி போர்களில் தங்களது திறனை நிரூபித்தவை ஆகும்.எனவே ஜே-20 இந்தியாவிற்கு பெரிய பிரச்சனையாக இருக்காது என நம்புவோம்..
கடைசியாக இயந்திரம் முக்கியமல்ல அதை யார் இயக்குகிறார்கள் என்பது தான் முக்கியம் என்ற வாசகத்தையும் நினைவில் கொள்ள வேண்டி உள்ளது.