
ஈரானின் தலைமை அணு விஞ்ஞானி மொஹ்ஸீன் ஃபக்ரிஸாதே கடந்த வருடம் நவம்பர் மாதம் ஈரானில் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இஸ்ரேலின் மொசாத் அமைப்பு ஈடுபட்டதாக பரவலாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஈரானிய ராணுவ வீரர்கள் சிலரே இஸ்ரேலுக்காக ஃபக்ரிஸாதேவை கொன்றுள்ளனர், அதுவும் அவர்கள் முக்கிய ஈரானிய தலைவர்களை பாதுகாக்கும் பிரிவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.