ஈரான் உடன் இந்திய கடற்படை கூட்டுப்பயிற்சியா ?

  • Tamil Defense
  • February 18, 2021
  • Comments Off on ஈரான் உடன் இந்திய கடற்படை கூட்டுப்பயிற்சியா ?

இந்தியா உட்பட மூன்று நாடுகள் கூட்டு பயிற்சி !!

இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியில் ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கடற்படைகள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்திய கடற்படையும் இந்த கூட்டு பயிற்சியில் இணைந்து பங்கு பெற்றுள்ளது.

இது குறித்து பேசிய ஈரானிய கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் கெலாம்ரெசா தஹானி,

இந்த கூட்டுபயிற்சிகளில் எந்த நாடுகள் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் எனவும்,

கடற்கொள்ளை தடுப்பு,தேடுதல் மற்றும் மீட்பு, கடல் மற்றும் வான் இலக்குகளை தாக்கி அழித்தல் போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.

இந்த கூட்டு பயிற்சி சுமார் 6500 சதுர மைல்கள் பரப்பளவிலான பகுதியில் நடைபெற உள்ளது மேலும் சீனாவும் இதில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.