
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஏலகங்கா படைதளத்தில் ஏரோ இந்தியா கண்காட்சி நடைபெற்று வருகிறது.
நேற்றைய தினம் இந்த கண்காட்சியை ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் ப்ரிகேடியர் ஜெனரல் அமீர் ஹத்தாமி பார்வையிட்டார்.
அப்போது பிரம்மாஸ் ஏவுகணையின் கடல்சார் வடிவத்தை பார்வையிட்ட அவர் ஈரானிய கடற்படைக்கு அதனை வாங்க விருப்பம் காட்டினார்.
பின்னர் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் இதர விஷயங்களை குறித்து பேசினார்.