பாகிஸ்தானில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய ஈரான் !!

  • Tamil Defense
  • February 5, 2021
  • Comments Off on பாகிஸ்தானில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய ஈரான் !!

நேற்று பாகிஸ்தானில் ஈரான் ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தி உள்ளது.

பாகிஸ்தான் ஈரான் எல்லையோரம் உள்ள சிஸ்தான் பகுதியில் இருந்து ஜெய்ஷ் அல் அதல் எனும் பயங்கரவாத குழு 11 ஈரானிய வீரர்களை கடந்த 2018ஆம் ஆண்டு கடத்தியது.

பாகிஸ்தானிய சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த அவர்களில் 5 பேர் அதே வருடம் விடுவிக்கப்ட்டனர், 4 பேர் 2019ஆம் வருடம் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால் 2 பேர் விடுவிக்கப்படாத நிலையில் ஈரான் ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தி அவர்களை மீட்டு உள்ளது.

பாகிஸ்தானில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய மூன்றாவது நாடு ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது.