அமீரகம் சென்றுள்ள இந்திய கடற்படை போர்க்கப்பல்

  • Tamil Defense
  • February 20, 2021
  • Comments Off on அமீரகம் சென்றுள்ள இந்திய கடற்படை போர்க்கப்பல்

NAVDEX 21 மற்றும் IDEX 21 ஆகிய போர்பயிற்சிகளில் கலந்து கொள்ள இந்திய கடற்படையின் பிரலயா போர்கப்பல் அமீரகத்தின் அபு தாபி சென்றுள்ளது.

பிப்ரவரி 20 முதல் 25 வரை நடைபெற உள்ள NAVDEX 21 (Naval Defence Exhibition) மற்றும் IDEX 21 (International Defence Exhibition) ஆகிய போர்பயிற்சிகளில் கலந்து கொள்ள இந்த கப்பல் அபு தாபி சென்றுள்ளது.

இந்தியா உள்நாட்டிலேயே கட்டிய பிரபால் வகை ஏவுகணை கார்வெட் கப்பல்களில் இரண்டாவது கப்பல் தான் இந்த ஐஎன்எஸ் பிரபால் கப்பல் ஆகும்.கடந்த டிசம்பர் 18 2002 அன்று இந்த கப்பல் படையில் இணைக்கப்பட்டது.

இந்த கப்பல் 56மீ நீளமும், 560 டன் எடையும் கொண்டது.கிட்டத்தட்ட 35 நாட் வேகத்தில் பயணிக்க கூடியது.
கப்பலில் ஒரு 76.2 mm மீடியம் ரேஞ்ச் துப்பாக்கி,ஃசாப் லாஞ்சர்கள் மற்றும் நெடுந்தூர தரை-தரை தாக்கும் ஏவுகணைகள் உள்ளன.இந்த கப்பலை கோவா கப்பல் கட்டும்
கட்டியது.