
இந்திய கடற்படையின் மூன்றாவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல் !!
இந்திய கடற்படை சுமார் 23,000 கோடி மதிப்பில் 6 ஸ்கார்பீன் ரக டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை வாங்க ஒப்பந்தம் செய்து இருந்தது.
கல்வாரி மற்றும் காந்தேரி ஆகிய இரு நீர்மூழ்கி கப்பல்கள் ஏற்கனவே படையில் இணைக்கப்பட்ட நிலையில்,
தற்போது கரன்ஜ் நீண்ட கடற்சோதனைகளுக்கு பின்னர் மூன்றாவது கப்பலாக படையில் அடுத்த மாதம் படையில் இணைக்கப்பட உள்ளது.
நான்காவது நீர்மூழ்கி கப்பலான வேலா தற்போது இறுதிக்கட்ட கட்டுமான பணிகளில் உள்ளது.
தற்போது இந்தியாவிடம் அரதப்பழைய 12 டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன ஆனால் அவற்றில் 6 மட்டுமே எப்போதும் தயார் என்ற நிலையில் உள்ளன.
ஆகவே இந்திய கடற்படை 18 புதிய டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள், 6 அணுசக்தி வேட்டை நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் 6 அணு ஆயுத அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை படையில் இணைக்க விரும்புகிறது.