Breaking News

ரஷ்யாவால் தயாரிக்க முடியாத மூன்றாம் தலைமுறை டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை தயாரித்துள்ள இந்தியா !!

  • Tamil Defense
  • February 26, 2021
  • Comments Off on ரஷ்யாவால் தயாரிக்க முடியாத மூன்றாம் தலைமுறை டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை தயாரித்துள்ள இந்தியா !!

ரஷ்யா ராணுவ தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்று.

அவர்களது துப்பாக்கிகள், போர் விமானங்கள், விமான எதிர்ப்பு அமைப்புகள் குறிப்பிட தகுந்தவை ஆகும்.

ஆனால் அதே நேரத்தில் பல இடங்களில் பின்தங்கிய நிலையில் உள்ளனர், அந்த வகையில் ரஷ்யாவால் மூன்றாம் தலைமுறை டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரிக்க முடியவில்லை.

ஆனால் இந்தியா இதில் வெற்றி பெற்று உள்ளது, சுமார் 4கிமீ தொலைவில் உள்ள இலக்கை எவ்வித மனித உதவியும் இல்லாமல் தாக்கி அழிக்கும் நாக் ஏவுகணைகளை தயாரித்து உள்ளது.

மேலும் அமெரிக்க ஜாவ்லினுக்கு இணையான அமோகா-3 எனும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை உருவாக்கி வருகிறது.

மேலும் ஹெலிகாப்டர்களில் இருந்து டாங்கிகளின் மேற்பகுதியை துவம்சம் செய்யும் ஏவுகணையும் தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.