சீன எல்லையில் இந்தியா தகுந்த படைபலம் பெற்றுள்ளதா? இதோ ஒரு அற்புத கட்டுரை

  • Tamil Defense
  • February 28, 2021
  • Comments Off on சீன எல்லையில் இந்தியா தகுந்த படைபலம் பெற்றுள்ளதா? இதோ ஒரு அற்புத கட்டுரை

இந்திய சீன எல்லையோரம் இந்திய ராணுவத்தின் பலம் குறித்த கட்டுரை !!

சமீபத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆய்வறிக்கை ஒன்றில் அருணாச்சல பிரதேசம் இந்திய ராணுவத்தின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதாக கூறுகிறது.

மேலும் அந்த அறிக்கையில் கிழக்கு பகுதியில் 85,000 துருப்புகள், 21 சுகோய்30 விமானங்கள் மற்றும் 36 ஹெலிகாப்டர்கள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாகவும்,

சிக்கீம் பகுதியில் 64,000 துருப்புகள், 30 போர் விமானங்கள், 30 குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் 10 ஹெலிகாப்டர்கள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாகவும்,

லடாக், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநில எல்லைகளில் மலையக தாக்குதல் பிரிவுகள், காலாட்படை பிரிவுகள் என ஒரு லட்சம் வீரர்கள் மற்றும்

துணை ராணுவ படை பிரிவுகள், போர்விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் என பெரிய படை காவல் பணியில் உள்ளது.

இந்தியா சீன எல்லையோரம் சுமார் 20% படையினரையும், 30% படையினரை எல்லைக்கு அருகேயும் நிறுத்தி உள்ளதாக அந்த அறிக்கையில் கூறுகிறது.

பல்வேறு வகையான 320 போர் விமானங்கள் அடங்கிய 10 போர் விமான ஸ்க்வாட்ரன்கள் சீன எல்லையோரம் நிறுத்தப்பட்டு உள்ளன.

இது தவிர மூன்று ஏ50 ஏவாக்ஸ் விமானங்கள், கடற்படையின் எட்டு பி8ஐ கண்காணிப்பு விமானங்கள் விமானப்படைக்கு உதவும் வகையிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சிக்கீம் பகுதியை இந்திய ராணுவம் மிக முக்கியமான பகுதியாக கருதுகிறது காரணம் மிக குறுகிய பகுதியான இதனை சீன ராணுவம் தாக்கி கட்டுபாட்டை எடுத்து கொண்டால் வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவில் இருந்து முழுவதும் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஆகவே இந்திய சீன எல்லையோரம் நிறுத்தப்பட்டு உள்ள படைகளில் 70% படையினர் சிக்கீம் மற்றும் கிழக்கு எல்லையோரம் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

சீன ஆய்வறிக்கை படி சீன எல்லையோரம் மூன்று கட்டங்களாக இந்திய படையினர் நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர், முதல் பிரிவு எல்லையில் இருந்து 20கிமீ தொலைவுக்குள்ளாகவும்,

இரண்டாவது பிரிவு முதல் 50 – 100 கிமீ தொலைவுக்குள்ளாகவும், மூன்றாவது பிரிவு, 100-300கிமீ தொலைவுக்குள்ளாகவும் நிலை நிறுத்தப்பட்டு உள்ளனர்.

1962ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா மலையக போர்முறையில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும்,

எட்டு காலாட்படை டிவிஷன்களில் ஏழு மலையக போர் டிவிஷன்கள் ஆகும், 38 ப்ரிகேடுகளில் 30 மலையக காலாட்படை மற்றும் ஆர்ட்டில்லரி ப்ரிகேடுகளாகும்.

மலையக காலாட்படை டிவிஷன்களில் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆர்ட்டில்லரி பிரிவுகள் இணைக்கப்பட்டு உள்ளன.

பல பத்தாண்டுகளாக மலையக போர்முறை, ஒருங்கிணைந்த வான் தரை போர்முறை, தாக்குதல் போர்முறை, தகவல் போர்முறை, போக்குவரத்து ஆகியவற்றில் தனது திறன்களை இந்திய ராணுவம் மேம்படுத்தி உள்ளது, மேலும் அவர்களின் போர் அனுபவத்தை குறைத்து மதிப்பிட கூடாது எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த ஆய்வறிக்கை எல்லையோரம் படைவிலக்கல் நடைபெறுகையில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.