
காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் இராணுவம் மற்றும் காவல் துறை வீரர்கள் இணைந்து நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிருஷ்ன தாபா தாக்குதலில் சம்பந்தபட்டவரை கைது செய்த பிறகு அனந்தநாக் காட்டுப்பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிருஷ்ண தாபா தாக்குதலில் இரு காவல்துறை வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்று ஏகே-56 துப்பாக்கிகள்,இரு சீன பிஸ்டல்கள்,இரு சீன கிரேனேடுகள்,ஒரு டெலஸ்கோப்,ஆறு ஏகே மேகசின்கள மற்றும் மேலதிக பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.