
முதல் இரண்டு த்ருவ் மார்க்3 ஹெலிகாப்டர்களை பெற்று கொண்ட கடற்படை !!
கோவாவில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய கடற்படை முதல் இரண்டு த்ருவ் மார்க்3 ரக ஹெலிகாப்டர்களை பெற்று கொண்டது.
இவை வழக்கமான த்ருவ்களில் இருந்து மாற்றியமைக்கப்பட்டவை ஆகும், இவற்றில் எல்பிட் நிறுவனத்தின் கடல்சார் ரேடார் மூக்குபகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
முதலாவது ஸ்க்வாட்ரன் கோவா தளத்தில் இருந்து இயங்கும், ஒரு ஸ்க்வாட்ரனுக்கு 16 ஹெலிகாப்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹெலிகாப்டர்களில் தீவிர சிகிச்சை பிரிவு, மீட்பு கருவிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை தேவைக்கேற்ப இணைத்து பயன்படுத்தி கொள்ள முடியும்,
மேலும் கதவு அருகே ஒரு 12.7மிமீ இயந்திர துப்பாக்கி பாதுகாப்பு காரணங்களுக்காக பொருத்தப்பட்டு உள்ளது கூடுதல் சிறப்பு.