ஒன்னே கால் மணி நேரம் தொலைபேசியில் சீனா அதிகாரிகளுடன் பேசிய வெளியுறவு அமைச்சர்..!

  • Tamil Defense
  • February 26, 2021
  • Comments Off on ஒன்னே கால் மணி நேரம் தொலைபேசியில் சீனா அதிகாரிகளுடன் பேசிய வெளியுறவு அமைச்சர்..!

சீன வெளியுறவு அமைச்சர் மற்றும் இந்த வெளியுறவு அமைச்சர் இடையே பேச்சுவார்த்தை !!

நேற்று மதியத்திற்கு பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்ஷங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது.

தொலைபேசி வாயிலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை சுமார் 75 நிமிடங்கள் நீடித்துள்ளது.

அப்போது இருதரப்பு பரஸ்பர உறவுகள், எல்லை பிரச்சினை, முழு படை விலக்கல் ஆகியவற்றை குறித்து இரு அமைச்சர்களும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.