
உள்நாட்டிலேயே கட்டப்பட்ட 105 டன் எடை கொண்ட C-453 என்ற இடைமறிப்பு கப்பலை இந்திய கடலோர காவல் படை தனது படையில் இணைத்துள்ளது.இந்தியாவின் சிறப்பு கிழக்கு பொருளாதார வழிதடத்தை பாதுகாக்க இந்த கப்பல் கிழக்கு கப்பல்கள் தொகுதியில் இணைக்கப்பட்டு அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட உள்ளது.
இந்த கப்பலை இந்தியாவின் லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனம் கட்டியுள்ளது. 27.80 மீ நீளம் கொண்ட இந்த கப்பல் மணிக்கு 85கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.ரோந்து,தேடுதல் மற்றும் மீட்பு மற்றும் ஆபத்தில் உள்ள கப்பல்கள் மீட்பு ஆகிய ஆபரேசன்களுக்கு இந்த கப்பலை பயன்படுத்த முடியும்.
எந்த பிரச்சனையாக இருந்தாலும் மிக குறுகிய நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு விரைய வேண்டி இந்த கப்பலில் அதிநவீன நேவிகேசன் மற்றும் தொடர்பு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.இந்த கப்பல் சென்னையில் உள்ள ஆபரேசனல் கன்ட்ரோன் கமாண்டின் கீழ் இயங்க உள்ளது.இந்த கப்பலை அசிஸ்டன்ட் கமாண்டன்ட் அனிமேஷ் சர்மா அவர்கள் வழிநடத்துவார்.
இந்த கப்பலுடன் தற்போது கடலோர காவல் படையிடம் 157 பெரிய மற்றும் சிறிய கப்பல்கள் உள்ளன.தவிர 62 விமானங்களும் உள்ளன.மேலும் தற்போது 40 கப்பல்கள் கட்டுமானத்தில் உள்ளன.தவிர 16 Advanced Light Helicopters MK III வானூர்திகளும் தயாரிப்பில் உள்ளன.