சீன எல்லையில் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தும் தரைப்படை !!

  • Tamil Defense
  • February 9, 2021
  • Comments Off on சீன எல்லையில் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தும் தரைப்படை !!

பாகிஸ்தானுடனான எல்லை கட்டுபாட்டு கோடு போல சீனாவுடனான கட்டுபாட்டு கோடு ரோந்து செல்வதற்கு தோதுவானது அல்ல.

அங்கிருக்கும் கடின நிலப்பரப்பு, கடுமையான காலநிலை, அதிக உயரம், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லா நிலை ஆகியவை ரோந்து மற்றும் கண்காணிப்பை சிக்கலாக்கி வருகிறது.

இந்த நிலையில் ராணுவம் இலகுரக, நடுத்தர மற்றும் கனரக ட்ரோன்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது, இஸ்ரேலிடம் இருந்து சில ஹெரோன் ட்ரோன்களை குத்தகை அடிப்படையில் பெறவும் ராணுவம் விரும்புகிறது.

இதுதவிர இந்திய நிறுவனம் ஒன்றுடன் 140கோடி மதிப்பிலான மிகச்சிறிய ட்ரோன்களுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் நமத் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்துள்ள எல்லையோர கண்காணிப்பு அமைப்பு ஒன்றை எல்லையில் நிறுவும் திட்டமும் ராணுவத்திடம் உள்ளது என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.