போர்க்கால அடிப்படையில் ஆயுத கொள்முதல் பாதுகாப்பு துறை துணை அமைச்சர் !!

பாதுகாப்பு துறை துணை அமைச்சர் ஷ்ரிபாட் நாயக் நாடாளுமன்றத்தில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.

அப்போது லடாக் விவகாரம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், போர்க்கால அடிப்படையில் ஆயுத கொள்முதல் நடைபெற்று வருவதாகவும்,

லடாக்கிற்கு ஏற்ற சிறந்த தொழில்நுட்பம் கொண்ட தளவாடங்களை இந்திய படைகள் கொள்முதல் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் பேசுகையில் இருநாடுகளை சேர்ந்த சுமார் 1,00,000 வீரர்கள் லடாக் எல்லைகளில் குவிக்கப்பட்டு உள்ளதாகவும்,

லடாக்கில் உள்ள இந்திய வீரர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை எதுவும் வழங்கபடவில்லை, அவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.