பிரம்மிக்க வைக்கும் திறன் கொண்ட விமானத்தை பெற உள்ள விமானப்படை

  • Tamil Defense
  • February 26, 2021
  • Comments Off on பிரம்மிக்க வைக்கும் திறன் கொண்ட விமானத்தை பெற உள்ள விமானப்படை

3 பில்லியன் டாலர்கள் மதிப்பில் விமானப்படைக்கு அதிநவீன கண்காணிப்பு விமானங்கள் !!

இந்திய விமானப்படைக்கு சுமார் 3 பில்லியன் டாலர்கள் மதிப்பில் கண்காணிப்பு விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது.

அதன்படி உளவு கண்காணிப்பு, குறிவைத்தல், தகவல் இடைமறிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அதிநவீன விமானங்களை வாங்க இந்திய விமானப்படை விரும்புகிறது.

அதன்படி அமெரிக்காவிடம் இருந்தும், நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தயாரிப்புகளும் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நமது விமான அமைப்பு ஏரோ இந்தியா கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது, நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த திட்டம் பாலகோட் தாக்குதலுக்கு பின்னர் முடுக்கி விடப்பட்டது.

இந்த விமானங்கள் நாட்டின் பாதுகாப்பு பன்மடங்கு உறுதி செய்யும், மிகவும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த அமைப்புகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு பெருத்த சவாலாக அமையும் என்பதில் ஐயமில்லை.