செஷல்ஸ் நாட்டிற்கு அதிவேக ரோந்து கலன் ஏற்றுமதி !!

  • Tamil Defense
  • February 5, 2021
  • Comments Off on செஷல்ஸ் நாட்டிற்கு அதிவேக ரோந்து கலன் ஏற்றுமதி !!

கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் கப்பல் கட்டுமான நிறுவனம் செஷல்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.

அதன்படி செஷல்ஸ் நாட்டு கடலோர காவல்படைக்கு ஒரு அதிவேக ரோந்து கலனை கட்டி கொடுக்க வேண்டும்.

இந்த கலன் வாட்டர் ஜெட் ப்ரோப்பல்ஷன் உடன் மணிக்கு 34 நாட்ஸ் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகவும் சுமார் 1500 நாட்டிக்கல் மைல் தொலைவு கொண்டதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த கலன் கடத்தல் தடுப்பு, கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் மற்றும் வேட்டை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உதவும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் கடலோர ரோந்து கலன் ஒன்று செஷல்ஸ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.