கூடும் பலம்…! டேங்க் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி..!
ஹெலினா டேங்க் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.இந்தியா உள்நாட்டிலேயே மேம்படுத்தியுள்ள வானில் வைத்து ஏவக்கூடிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.விரைவில் விமானப்படை மற்றும் இராணுவம் இந்த ஏவுகணையை ஆர்டர் செய்ய உள்ளது.
ஐந்தாவது சோதனையாக தற்போது இராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து இந்த சோதனையை நடத்தியுள்ளன.மணிக்கு 260கிமீ வேகத்தில் வானூர்தி பறந்த வண்ணம் நகரும் இலக்கின் மீது ஏவுகணை ஏவி பரிசோதனை செய்யப்பட, ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியழித்துள்ளது.
7கிமீ வரை சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட ஹெலினா நமது ருத்ரா மற்றும் இலகுரக தாக்கும் வானூர்திகளுக்காக மேம்படுத்தப்பட்டுள்ளது.
Infrared imaging seeker வழிகாட்டு அமைப்பை கொண்டுள்ள இந்த ஏவுகணை உலகில் உள்ள நவீன ஏவுகணைகளுள் ஒன்றாகும்.நாக் ஏவுகணையின் மறுவடிவம் தான் இந்த ஹெலினா ஆகும்.நேரடி மற்றும் டாப் அட்டாக் மோட் என இரு வகையிலும் எல்லாவித காலநிலையிலும் இலக்கை தாக்க வல்லது.
இராணுவம் ஹெலினா ஏவுகணையை வாங்கி தனது ருத்ரா வானூர்திகளில் இணைத்து பயன்படுத்தும்.அதே போல விமானப்படைக்கான ரகத்தின் பெயர் துருவாஸ்திரா ஆகும்.