
உலகிலேயே அதிகமாக இராணுவ தளவாட இறக்குமதி நாடு என்ற பெயரை இந்தியா பெற்றுள்ளது.இதை மாற்றும் வகையில் உள்நாட்டு ஆயுத தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது இந்தியா.இதற்காக பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தயாரிக்கப்படும் இராணுவ தளவாடங்களை பெற சுமார் 70000 கோடிகளை ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்படும் மேலதிக ஆயுதங்கள் குறித்த லிஸ்ட் ஒன்று விரைவில் வெளியிடப்பட உள்ளது.இந்த லிஸ்டில் உள்ள ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது.மாறாக உள்நாட்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து பெறப்படும்.